AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Sunday 31 January 2016

CIRCLE UNION HAS TAKEN UP THE CASE - CHIEF PMG, TN INITIATED ACTION TO PROMOTE 16 OFFICIALS INTO PM GRADE III

என்ன செய்கிறது  உங்கள் மாநிலச் சங்கம் ?

கடந்த 08.01.2016 அன்று தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கோரி  நம்முடைய CHIEF  PMG அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசினோம். இது குறித்து நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் கடித நகலை அன்றைய தேதியிலேயே பிரசுரித்திருந்தோம். அந்தக் கடிதத்தின்   ஒரு  பகுதி   கீழே   உங்கள்   பார்வைக்குத் தருகிறோம்.  

CHIEF PMG அவர்கள் , இதில்  பல பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த செய்தி தனியே தருகிறோம்.

No. P3/ General                                                                    Dt. 08.01.2016             
To
Dr. Chales Lobo, IPoS.,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

Sub:  Request for immediate follow up action on long pending issues which were discussed/
       agreed upon  at  various  informal/formal meetings  –  Reg.
                                                                                   ….

The kind and personal attention of the CPMG, TN   is requested on the under mentioned items for  immediate intervention/taking favourable decision for immediate settlement.
 ===============================================================================

4.     Request to hold DPC for giving regular promotion from Postmaster Gr. II to  Postmaster Gr. III since 16 Gr. II officials are completed the minimum required service and 39 Gr. III posts are reportedly vacant. Till such time of completing the formalities for DPC process, eligible officials may be given promotion on adhoc basis.

============================================================================

நம்  கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு POSTMASTER  GRADE  III க்கான 39 காலியிடங்களில் , தகுதியான 16 பேருக்கு  பதவி உயர்வு வழங்கிட  அனைத்துக் கோட்டங்களுக்கும் கோப்புகள் கோரப்பட்டுள்ளன. இது  நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். உடன் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட  நம்முடைய  CHIEF  PMG அவர்களுக்கு  நம்  நன்றி ! 

( WE ARE VERY MUCH THANKFUL TO OUR CHIEF PMG FOR TAKING SWIFT ACTION ON THIS MATTER )




LATEST NEWS FROM CIRCLE UNION ON DIFFERENT MATTERS

என்ன செய்கிறது  உங்கள் மாநிலச் சங்கம் ?

கடந்த 28.01.2016 அன்று  -  ஏற்கனவே 08.01.2016 அன்று  நம் மாநிலச் சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின்  அடிப்படையில் - பல்வேறு பிரச்சினைகள் குறித்து   CHIEF  PMG அவர்களிடமும் , DPS  HQ /DPS CCR அவர்களிடமும்  நாம் பேசினோம் .  அதனடிப்படியில்  மாநில நிர்வாகம் அளித்த பதில்களை  கீழே  தருகிறோம்.

1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM  கூட்டம் எதிர்வரும்  16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான  SUBJECTS  01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.

2.வெள்ள முன்பணம்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு  நிச்சயம் அடுத்த வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுதும்  வழங்கிட  நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளுடன்  பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி  மாவட்டப் பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும்  சேர்த்து வழங்கிட  CHIEF  PMG அவர்கள் உறுதியளித்துள்ளார்.

3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE  FUND இல் இருந்து  உதவித்தொகை விண்ணப்பித்த GDS  ஊழியர்களுக்கு,  உரிய  VAO சான்றாவது  இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே  வழங்கிடப்படும் என்று CPMG  தெரிவித்தார். இதற்கு  மாநில  சேமநல நிதியில்  உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய  சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்  குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

4. நாம் கேட்டுக் கொண்டபடி  GDS  இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய  தேர்வுக்கான  அறிவிக்கையானது  கண்டிப்பாக அடுத்த வாரத்தில்  வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

5. 2015க்கு அறிவிக்கப்படவேண்டிய  LGO  TO P .A . தேர்வுக்கான அறிவிக்கை நிச்சயம் இந்த மாதத்தில் (FEBRUARY 2016) 15 இலிருந்து 20 நாட்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

6. 2015 -16 க்கான  5 ஆவது LSG  பதவி  உயர்வுப் பட்டியல்  தயார் நிலையில் உள்ளது.  கடந்த பட்டியலில் உள்ளவர்கள் பதவி உயர்வில் சென்று சேர்ந்தவுடன் இது  வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப் பட்டது. அதாவது அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம். இதுவரை  அஞ்சல் பகுதியில் மட்டும்  378 பேருக்கு பதவி உயர்வும் , இதன் காரணமாக  378 எழுத்தர் காலியிடமும்  நாம்  போராடிப் பெற்றுள்ளோம்.

7.மேலும்  "போனஸ்" ஆக 2016-17 க்கான  LSG  பதவி உயர்வுப்  பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது  உபரிச் செய்தி. 

8. இது தவிர , இதுவரை  மருத்துவ  காரணங்கள் மற்றும் ஒய்வு பெறுவது நெருக்கத்தில் உள்ளது என்பது போன்ற காரணங்களால் பதவி உயர்வு DECLINE  செய்த  ஊழியர்களின்  காலியிடங்களுக்கும்  நிரப்பிட மேலும் ஒரு பட்டியல் வெளியிடப்படும் என்ற உறுதியை  CHIEF  அவர்களிடம் கோரிப் பெற்றுள்ளோம் என்பது  சிறப்பான  செய்தியாகும்.

9. ஏற்கனவே  கடந்த 2013-14, மற்றும் 2014-2015 ஆண்டுகளில் நம்முடிய கடுமையான முயற்சியினால் அறிவிக்கப்பட்ட  SCRAPPING COMMITTEE மூலம்  CONDEMNATION  அறிவிக்கப்பட்ட  COMPUTER  மற்றும் அதன் உப பொருட்களுக்கு மாற்றாக   புதிய  கணினி/ உப பொருட்கள் வாங்கிட  நம் மாநிலச் சங்கத்தின் முயற்சியால்  கடந்த 16.12.2014  JCM இலாக்கக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது உங்களுக்குத் தெரியும்.  

பின்னர் மீண்டும் மீண்டும்  FOUR  MONTHLY  MEETING , RJCM  MEETING  என்று பிரச்சினை வைக்கப்பட்டு  கடந்த 13.6.2015 மற்றும் 23.11.2015 தேதிகளில் மீண்டும் துறைச்செயலருக்கு  நினைவூட்டுக் கடிதங்கள் அளித்ததன் விளைவாக, இலாக்கா    நம்முடைய பொதுச் செயலருக்கு   தமிழகத்திற் கென்றே தெளிவான  தனியான பதிலையும்  அளித்துள்ளது. அதனடிப் படையில்  இந்த நிதி ஆண்டில்  2013-14 மற்றும் 2014-2015 க்கான ESTIMATE க்கான நிதி ஒதுக்கப்பட்டு  பெற  உள்ளோம்.  இது குறித்த  உரிய ஆவணங்களுடனான செய்தியை தனியே  தருகிறோம். 

இது  தமிழ் மாநிலச் சங்கத்தின் அயராத  முயற்சிக்கு  கிடைத்த வெற்றியாகும். வேறு எந்த மாநிலங்களிலும் பெறாத  நிலையாகும். இதற்கு   இடைவிடாது முயற்சித்த முன்னாள்  பொதுச் செயலர் தோழர். KVS ,  தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். பராசர்  ஆகியோருக்கும்  நம் நன்றி உரித்தாகும்.

10. இன்று (30.01.2016) Mc CAMISH  பிரச்சினை  காரணமாக  நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  தொடர்பற்றுப் போனதால்  B .O . க்களில் பெறப்பட்ட பல நூற்றுக் கணக்கான  RPLI  PREMIUM   S .O . க்களில் கணக்கில் கொண்டு வர இயலவில்லை. இது குறித்த புகார் மாநிலச் சங்கத்திற்கு மதியம்  3.30 மணியளவில் கிடைக்கப் பெற்றவுடன் , இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறையான போதிலும்,  நாம் அலைபேசியில்  CHIEF  அவர்களிடம் பிரச்சினையைக் கூறி புகார் அளித்தோம். அவரும் மற்றும் DPS HQ  ADDL CHARGE  நிலையில் உள்ள  DPS CCR அவர்களும், உடன்  DTE  வரை பேசி  உரிய ஆவன  நடவடிக்கையை விரைவாக எடுத்து  மாலை  04.55 க்கு  நமக்கு சரி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தார்கள் .மாலை  05.05 மணி  முதல் Mc CAMISH செயல்படத் துவங்கியதாக   பல பகுதிகளில் இருந்தும் நமக்கு  தோழர்கள் தெரிவித் தார்கள். உடன் நடவடிக்கை மேற்கொண்ட  CPMG  மற்றும்  DPS  CCR  ஆகிய  இருவருக்கும்  நம் நன்றி !

                  மீண்டும்   இதுபோன்ற  பல செய்திகளுடன்  சந்திப்போம் !

--
Posted By All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle toaipeup3tn at 1/31/2016 12:06:00 AM

Tuesday 26 January 2016

WE ARE VERY MUCH PROUD TO ANNOUNCE THAT WE GOT THE ORDERS FROM THE DEPARTMENT TO END THE SUFFERINGS OF THE LAKHS OF CLERICAL EMPLOYEES !

சும்மா  வராது  சுதந்திரம் ! நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த  வெற்றியே  இது ! 

"இனி  மாநிலச் சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்" என்று  "ஞாபக மறதியாக (?)" கூட சில  கோட்டச் சங்க வலைத்தளங்களில் எழுத வேண்டாம் என்று  மாநிலச் சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது ! 

அதை  வேறு சில கோட்ட சங்கங்கள்  மறுபதிப்பு செய்திட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

எவராலோ  கிடைத்த உத்திரவு இது என்று WHATSAPP  , FACEBOOK இல் ஞாபக மறதியாக கூட  நீங்கள்  போட வேண்டாம். 

“நம் சங்கத்தின்”  வெற்றி இது என்று சொல்லிக்கொள்ள  நம் சங்கத் தோழர்களுக்கே”  ஏனோ  கூச்சம் அவர்கள் வேறு சங்கம் அல்லவே ?

மாநிலச்  சங்கத்தின் முயற்சியாலேயே கிடைத்தது  இந்த உத்திரவு என்பது  மறக்கலாகாது ! உங்கள் மாநிலச்  செயலர்  உங்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் கூட  என்பதை  நினைவில் கொள்க !

அகில இந்திய பொதுச் செயலர் தோழர். பராசருக்கு கூட   நன்றி தெரிவிக்காமல் இருப்பது சரிதானா  என்பதை  யோசிக்கவும்.


கடந்த 2015,  நவம்பர் 2 ந் தேதி நம் தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில்  நாம் பிரசுரித்த செய்தி மற்றும் அகில இந்திய  சங்கத்தின் கடித நகலை  மீண்டும்  கீழே  தருகிறோம். பார்க்க ! மீண்டும் ஞாபகம்  கொள்க !

================================================================================

MONDAY, NOVEMBER 2, 2015


CHQ LETTER TO SECRETARY POSTS ON IRREGULAR FIXING OF BUSINESS HOURS BEYOND THE PRESCRIBED NORMS

தமிழகத்தின்   பல  பகுதிகளில் இருந்து, அலுவலகங்களின்  BUSINESS  HOURS என்பது ஒட்டுமொத்தமாக , சனிக்கிழமை  உட்பட 7 மணி நேரமாக மாற்றப் பட்டு வருவதாக புகார்  வந்தது. மேலும்  பல  மாநிலங்களிலும் இந்த நிலை தொடர்வதாக  நமக்கு  தெரிவிக்கப்பட்டது. 

எனவே நம்முடைய  மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று  நம்முடைய அகில சங்கத்தின் கவனத்திற்கு ஈமெயில் மூலம் இந்த  பிரச்சினையை கொண்டு சென்றது.   நமது அகில இந்திய  சங்கமும்  தற்போது  இந்த பிரச்சினை  இலாக்கா  முதல்வரின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க  கடித  நகலை . மேலும்  இந்தப் பிரச்சினையை  JCM DEPTL COUNCIL MEETINGலும் எடுத்திட நம் மாநிலச்சங்கம், அகில இந்திய சங்கத்தைவேண்டியுள்ளது.

கடித  நகல்   கீழே  பார்க்க :-

பெற்ற  உத்திரவும்  கீழே  பார்க்க :-

Saturday 16 January 2016

Know More About Rural ICT For Gramin Dak Sewaks W

Know About Rural ICT For GDS In India PostLaunch of the Rural ICT project of the Department by handing over the solar powered, biometric hand-held devices with connectivity along with the application software to Gramin Dak Sewaks from three pilot Circles viz Bihar, UP and Rajasthan on 28th Dec 2015

Benefits of Hand-held device to the rural citizen 

  1. Electronic transactions- Booking and delivery of Speed Post, registered mail, money orders, sale of stamps and postal stationery will be done through these devices and paper receipt shall be generated 
  2. instantaneously thereby eliminating chances of overcharging and other problems associated with manual transactions. Savings Bank deposits & withdrawals, PLI/RPLI premium deposits and loan/claim payments will also be done electronically on these devices. 
  3. Immediate uploading of transaction data and financial reconciliation- Using mobile connectivity, data pertaining to all transactions done on the hand-held devices shall be uploaded onto the central server. E-Money order will reach the destination post office instantaneously unlike present day where the money order is digitized at the nearest computerized Post Office and leads to delay in delivery. All financial transactions shall also be reconciled immediately without any manual intervention and Cash on Delivery amount collected in the village shall be immediately credited to the account of e-Commerce Company. Similarly the artisans would be able to fulfill e-commerce orders and receive immediate payment for their sold products online. This will have a positive impact on the overall economy of the villages. 
  4. Automatic track and trace- Speed Post and Registered letters/parcels and money remittances will be trackable at the Branch Post Office level and booking/delivery information will also be uploaded to central server immediately. 
  5. Fraud and leakage elimination- As Savings Bank and Postal Life Insurance transactions will be done on a real-time basis and through immediate generation of receipt and voice message, chances of fraud would be eliminated. Biometric authentication of MNREGS and social security beneficiaries at the time of pay-out would also reduce leakage in the schemes 
  6. Post Offices as Common Service Centres- Branch Post Offices shall be able to work as Common Service Centres and offer services such as Railway Reservation, online bill payment for electricity and water utilities, mobile and DTH recharge, insurance policy premium payments & transactions for partner banks/insurance companies/mutual funds etc

ORDERS FOR RAISING THE BONUS CELLING TO DOPT RS. 7000/-

Saturday 9 January 2016

MINUTES OF THE FOUR MONTHLY MEETING HELD WITH THE CHIEF PMG, TN ON 18.12.2015



அன்புள்ள கோட்ட/ கிளைச் 
செயலர்களுக்கு , வணக்கம். 

நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான  மாநில நிர்வாகத்துடனான பேட்டியின் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை குறிப்பு (MINUTES ) கீழே அளிக்கப்பட்டுள்ளது. 

இதில்  சுட்டிக் காட்டப்பட்டுள்ள  மூன்றாவது பிரச்சினையில் , பல  கோட்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகங்களில்  நீண்டகாலமாக  பல உள் காரணங்களுக்காக (?) சில  ஊழியர்களை நீண்டகாலம் தங்கள் அலுவலகத்தி லேயே  இருத்தி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் BRANCH மாற்றப்பட்டுள்ளதாகவும்,  அல்லது இடையில்  வெளியே  போய் (பொய்) வந்ததாகவும் பல காரணங்களை   தெரிவித்து , அந்த நபர்கள்  TENURE முடிக்காதது போல பதில் அனுப்பியுள்ளனர். இதில் பல கோட்டக் கண்காணிபாளர்கள் மேல்   லஞ்ச  ஊழல் புகாரும்   எழுந்துள்ளது. இது குறித்து மத்திய  புலனாய்வுத்  துறைக்கு  உரிய  புகார்  நம்  அகில இந்திய சங்கத்தின் மூலம் புது டெல்லியில் நேரிடையாக  கொடுக்க உள்ளோம்.

ஆக PMG  மற்றும் CHIEF  PMG க்களுக்கான TENURE நீட்டிப்பு ( 5 மற்றும்  6 ஆண்டுகள் )  அதிகாரத்தையும் அவர்களே தங்கள் கையில்  எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளனர்; ஊழல்  புரிந்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. நமக்கு  எந்த  தனிப்பட்ட ஊழியர் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. 

நாம் பொதுவாக  தமிழகத்தில் உள்ள எல்லா கோட்டங்களிலும்  விதி மீறி நீண்டகாலம்  ஒரே இடத்தில்  உள்ள ஊழியர் குறித்துதான் புகார் செய்துள்ளோம். இதில்  சங்கப் பாகுபாடு  இல்லை. 

இதில்  CPMG  அவர்களின் பதிலை நன்கு  பார்க்கவும்.  அதனடிப்படையில் உங்கள் கோட்டங்களில் விதி மீறி OVER  TENURE  அல்லது  SENSITIVE  POST இல் அதிக காலம் உள்ள ஊழியரின்  பெயரை , அவர்   பணியாற்றிய  கால அளவை சரியாக குறிப்பிட்டு மாநிலச் சங்க  ஈமெயில்  முகவரிக்கு  உடன் அனுப்பிட வேண்டுகிறோம். 
உரிய  ஆவணங்கள் இருந்தால் அவற்றினையும் SCAN செய்து அனுப்பிட வேண்டுகிறோம். குறிப்பாக தருமபுரி, சேலம் மேற்கு, தாம்பரம், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,  அரக்கோணம், தூத்துக்குடி  கோட்டச் செயலர்கள் உடன் செயல்பட வேண்டுகிறோம். உங்கள் பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.  
   
 

SUCCESS FOR CIRCLE UNION'S CONTINUED EFFORTS ON SEVERAL STAFF MATTERS !

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத 

முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் !



1. மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும் ஈரோடு கோட்டத் தோழர்களின்  தொடர்ந்த போராட்ட இயக்கங்களின் காரணமாகவும் ஊழியர் விரோத , ஊழல் அதிகாரி ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி திரு. சுந்தரராஜன் அவர்கள்  08.01.2015 அன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  


பிரச்சினையில் தலையிட்டு  தற்காலிகத்  தீர்வு தந்த ( பிரச்சினை இட மாற்றம் பெற்றிருக்கிறது ) CHIEF  PMG அவர்களுக்கும் , மேற்கு மண்டல PMG அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பில்   நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில/ மண்டல நிர்வாகம் உடனடியாக தவறுகள் பல புரிந்த அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடக் கோருகிறோம்.



2. முன்னாள்  திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரால் அனைத்து சங்கங்களின் அறிவிப்பு பலகை  அஞ்சலக உள்  வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது  உங்களுக்குத் தெரியும்.  அந்த அதிகாரியும் நம்முடைய மாநில மற்றும் அகில இந்திய சங்கங்களின் தொடர் புகார்களால்  இடமாற்றம் செய்யப்பட்டு வேறு மாநிலத்திற்கு அனுப்பப் பட்டதும் உங்களுக்குத் தெரியும் .  

தற்போது புதிய அதிகாரியிடம் இந்தப் பிரச்சினை  எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலக   உள்  வளாகத்திலேயே நம்  சங்க அறிவிப்பு பலகை கடந்த 31.12.2015 அன்று மீண்டும் வைக்கப்பட்டது  என்பதை பெருமையாக   அறிவிக்கின்றோம்.  

புதுகை மாநில மாநாட்டில்  நம்முடைய மண்டலச் செயலர் தோழர். ஜோதி அவர்களின்  சூளுரை   நிறைவேற்றப் பட்டது.   இதற்கான   உரிய உத்திரவை அளித்த  நம்முடைய  CPMG    திரு. சார்லஸ் லோபோ அவர்களுக்கும், மண்டல நெறியாளர் திருமதி. நிர்மலாதேவி அவர்களுக்கும்  மற்றும் கோட்ட  முதுநிலைக் கண்காணிப்பாளர்  திரு.  சாந்தகுமார்  அவர்களுக்கும்  நம் மாநிலச்   சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றி  !


3. கடந்த 10.1.2014 COC  யின்  தென் மண்டல  தொடர் முழக்க ஆர்ப்பாட்டத் தில் பங்கு கொண்டதால்  பழி வாங்கப்பட்ட  தோழர்களில் ஏற்கனவே 12 பேர்களுக்கு மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சியால் DIES NON  தண்டனை ரத்து செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியும். 


தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநிலச் சங்கத்தின் ஆலோசனை பெற்று ஒன்றரை வருடங்கள் கழித்து   உரிய அதிகாரிக்கு முறையாக மேல் முறையீடு செய்த  தென்காசி  கிளைச் செயலர்  தோழர். சண்முகவேல் அவர்களின் மேல்முறையீடு , காலதாமதம் CONDONE செய்யப்பட்டு , ஏற்கப்பட்டு அவரது தண்டனை முழுவதுமாக  ரத்து செய்யப்பட்டது.  மேல்முறையீட்டை முறையாக ஆய்வு செய்து  இந்த உத்திரவை வழங்கிய  தென் மண்டல நெறியாளர் திருமதி. நிர்மலாதேவிஅவர்களுக்கு நம் மாநிலச்   சங்கத்தின் நன்றி !



4. இதய நோய் காரணமாக  அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நம்முடைய தென் சென்னை  கோட்டத்தைச் சேர்ந்த  தோழர். திரு. குரு சங்கரன் அவர்களுக்கு, 


மாநிலச் சங்கத்தின்  SMS  அவசர அறிவிப்பையே ஏற்று, தெரிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்  உடனடியாக அறுவை சிகிச்சைக்கான முன்பணம் வழங்கிட  உத்திரவு வழங்கி காசோலையையும்  செலுத்தச் செய்த  சென்னை பெருநகர மண்டல  PMG திரு மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கும், இதற்கு உதவி புரிந்த தென் சென்னை கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களுக்கும் நம்முடைய    மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றி !


தற்போது அந்த  தோழர்.  அறுவை சிகிச்சை முடிந்து நலமாக  உள்ளதாக கோட்டச்  செயலர்   தோழர். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விரைவில்  நலமுடன்  இல்லம்  திரும்ப வாழ்த்துகிறோம் !



5.  தென் சென்னை  கோட்டத்தின்  புனித தாமஸ்   மவுண்ட்  தலைமை அஞ்சலக  கட்டிட த்தின்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து நம்முடைய மாநிலச் சங்கத்தின்  புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்திட ஏற்கனவே   நம்முடைய  CPMG  அவர்கள்     PMGG  CCR , PMGG  MM   மற்றும்  EE  CIVIL கொண்ட  மூவர்  குழுவை அனுப்பி  நேரில்  ஆய்வு  செய்து  அறிக்கை அனுப்பிட  பணித்தது  குறித்தும் , அவர்கள்  நம்முடைய கோட்டச் செயலர் தோழர். ராஜேந்திரனிடம் நேரில்  பல  பிரச்சினை  குறித்து கேட்டு அறிந்ததும்   உங்களுக்கு  ஏற்கனவே தெரிவித்திருந்தோம் .  தற்போது அந்தக் குழுவின்  அறிக்கை அடிப்படையில்   தலைமை அஞ்சலக கழிப்பறைகளைப் புதுப்பித்திட  ரூ.1,84,000/-  முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளருக்கே  அதிகாரம்  வழங்கி  உத்திரவு  பெற்றுள்ளோம். CIVIL  WING  இந்தப் பணியைச்  செய்யக் கூடாது என்ற  முடிவை எடுத்த  CPMG  மற்றும்  PMG CCR ,  PMG MM  ஆகியோருக்கு  நம் நன்றி.  மேலும் கட்டிடத்தின் தென்பகுதி  தரைப்பகுதியில்   ECOMMERCE  ஊழியருக்கு   கட்டப்படவிருந்த  கழிப்பறை  எட்டு  அடி  தள்ளி   தற்போது  கட்டப்பட பணிக்கப் பட்டுள்ளது. மேலும்  இந்த  கழிப்பறைகள்   தலைமை அஞ்சலக பெண் ஊழியர்களுக்கும்  பயப்படும்  வகையில்  மாற்றியமைக்கப் படும்  என்று  PMG CCR  உறுதி  அளித்துள்ளார்.


6. பழிவாங்கும் நடவடிக்கையாக ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நம்முடைய  RMS  மூன்றின் மாநிலத் தலைவர்  தோழர். K . R . கணேசன் அவர்களின்   பிரச்சினை   நம்முடைய  NFPE  உறுப்பு சங்கங்களால்  RJCM மற்றும்  FMM  கூட்டங்களில் எடுத்துச் செல்லப்பட்டு  CPMG அவர்களிடம் இடமாற்றம் மாற்றித்தர ஒப்புதல் பெறப்பட்டது. 


கடந்த 29.12.2015 அன்றைய  இரு மாதங்களுக்கு ஒரு  முறையிலான  PMG WR  அவர்களு டனும் எடுத்துச் சென்று பேசப்பட்டது. அவரும் உடன்  இதனை ஏற்றுக் கொண்டு  உத்திரவிடுவதாக  உறுதியளித்தார்.  அதன்படி  கடந்த 06.01.2016 அன்று  அவர்  திருப்பூர்  RMS  க்கு  இடமாற்ற  உத்திரவு பெற்றார்  என்பதை  மகிழச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 



மேலும்  கடந்த 29.12.2015 மேற்கு மண்டல  PMG யுடனான பேட்டியின் போது கடிதங்கள் அளித்து பேசப்பட்ட பிரச்சினைகள்,  கடந்த 30.12.2015 அன்று தென்மண்டல PMG யுடனான பேட்டியின்போது  கடிதங்கள் அளித்து பேசப்பட்ட  பிரச்சினைகள்,  ஜனவரி முதல்  நாளன்று  CHIEF PMG இடம் கடிதம்  அளித்து  பேசப்பட்ட பிரச்சினைகள்  மற்றும் இந்த வாரத்தில்  PMG CCR  அவர்களிடம் கடிதங்கள்   அளித்து  பேசப்பட்ட  பிரச்சினைகள் குறித்து அடுத்த   செய்தியில் தெரிவிக்கிறோம்.

முயற்சிகள்  தொடரும்  !   வெற்றிகளும் கூடவே  தொடரும்தானே  ?
--
Posted By All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle toaipeup3tn at 1/09/2016 01:53:00 AM

Wednesday 6 January 2016

MAJOR VICTORY TO OUR CIRCLE UNION EFFORTS. IT IS A RECORD


DUE TO HECTIC EFFORTS OF  OUR CIRCLE UNION NOW IV LIST FOR THE  YEAR 2014-15  FOR LSG PROMOTIONS
RELEASED IN TN CIRCLE .  

ONE MORE LIST FOR 2015-16 IS AWAITED. WE WOULD GET IT RELEASED BEFORE THE END OF THIS MONTH. 

THEREBY WE CAN GET MORE THAN 500 RESULTANT VACANCIES IN P.A. CADRE TO BE ANNOUNCED BEFORE 
31.3.2016 FOR THE  EXAMS  TO BE SHEDULED,  IN ADDITION TO THE REGULAR VACANCIES AND RESIDUAL
VACANCIES, DUE TO AGREEMENT OBTAINED OUT OF DEC. 1st & 2nd  STRIKE CALL.(THE AGREEMENT WAS
ALREADY PUBLISHED IN OUR WEB SITE AS WELL AS SENT THROUGH EMAIL TO ALL  OUR OFFICE BEARERS/
DIVL/BRANCH SECRETARIES.)

2016 WOULD BE  THE MAJOR RECRUITMENT YEAR FOR P.A.s   IN TAMILNADU CIRCLE. 

THIS IS THE MAJOR VICTORY OF OUR CIRCLE UNION ON  OUR CONTINUED EFFORTS.

YRS
J. RAMAMURTHY,
CIRCLE SECRETARY,
AIPEU GR. C, TN.

LSG PROMOTIONS IV LIST RELEASED IN TAMILNADU CIRCLE FOR THE YEAR 2014-2015 ; AWAITING FOR ONE MORE LIST FOR 2015-16

Pre budget consultation meeting with Central Trade Union leaders On Monday - Trade Unions Asked The Government To Increase The Income Tax Exemption Limit To Rs 5 Lakh

Pre budget consultations with Trade Union leaders - Finance Minister cleared some of the apprehensions and also assured on some specific issues.


Trade unions on Monday asked the government to increase the income tax exemption limit to Rs 5 lakh and the minimum wage  from Rs 18,000 besides raising the minimum monthly pension to Rs 3,000 for all.

They also sought a special package for victims of the recent Tamil Nadu floods.

These demands were raised under a 15-point charter submitted by 11 central trade unions to Finance Minister Arun Jaitley during pre-Budget consultations held here. The Union Budget for the next financial year, 2016-17, is slated to be presented in Parliament in February end. It will take effect from April 1.

The 7th Pay Commission has recommended Rs 18,000 as minimum monthly wage for central government workers and it should be the benchmark, for other sectors also. Bharatiya Mazdoor Sangh  said.

All Indian Trade Union Congress Secretary DL Sachdev said: “We have also demanded Rs 3,000 minimum monthly pension for all and asked for a special package for flood ravaged Tamil Nadu to provide relief to workers as well as industry in the next Budget.”

Sachdev said that in view of price rise “we have also demanded from the government to increase the income tax exemption limit to Rs 5 lakh per annum”.

The union have also asked that fringe benefits like housing, medical and educational facilities and running allowances in railways should be exempted from Income Tax.

Unions also demanded that PSUs should be strengthened and expanded and the disinvestment of government shares in profit making PSUs should be stopped.

Besides, they said that the budgetary support should be provided for revival of potentially viable sick PSUs.

On the price rise, the charter said: “Take effective measures to arrest the spiralling price rise especially of food and essential items of daily use. Ban speculative forward trading in essential commodities, check on hoarding and universalise and strengthen Public Distribution System.”

Expressing concerns over steel and aluminium sectors, the unions said: “Relentless and increasing flow of import of industrial commodities including capital goods must be contained and regulated to prevent dumping and also to protect and promote domestic industries and prevent loss of employment.”

It also said that “FDI should not be allowed in crucial sectors like defence production, Railways, financial sector, retail trade and other strategic sectors. In other areas, terms and conditions for FDI should be made public.
The Finance Minister also assured the delegation that, neither Railways nor Coal India will be privatised and their identity will be protected. Responding, the apprehension made by BMS, CITU, AITUC, and AICCTU on FDI issue, he promised that, his government will maintain the Government character while implementing FDI policy and will not raise FDI cap more than 49% as the Government needs huge amount of money to create new infrastructure in Railways etc.
He informed the Trade Union leaders that, his government does not want any strikes in banking sector and initiates bipartite settlement soon. Replying the doubts raised by LPF and BMS on Nokia issue of Chennai , he said that ,the Government will take a serious note on this issue and try to save the Industry as the govt wants to protect jobs of thousands of people.
The Meeting was chaired by Finance Minister Sri Arun Jaitely. The Minister of State for Finance ,Sri Jayanth Sinha,; Chief Economic Advisor Sri Aravind Subramanyam ; Secretaries of Revenue , Expenditure ,Financial Services , Labour along with Senior officials participated in this meeting . From, Trade Union side representatives’ of all the 12 Central Trade Unions participated. Ms Panuda Boonpala, Director I/c of ILO Delhi was the Special Invitee for these consultations.

Original copy of the Gazette Notification on Bonus (Amendment) Act 2015 for increasing in Bonus ceiling