AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday 10 September 2015

CABINET APPROVED 6% D.A. TODAY

Release of additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners due from 1.7.2015 

   The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved release of an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to Pensioners w.e.f. 01.07.2015. This represents an increase of 6 percent over the existing rate of 113 percent of the Basic Pay/Pension, to compensate for price rise.
   This will benefit about 50 lakh Government employees and 56 lakh pensioners.

        The increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 6th Central Pay Commission (CPC). The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be in the order of Rs. 6655.14 crore per annum and Rs.4436.76 crore in the financial year 2015-16 (for a period of 8 months from July, 2015 to February, 2016). 

Wednesday 9 September 2015

DEPARTMENT CASE AT JODHPUR HIGH COURT JUDGEMENT


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0PPWejjK_iP7eCQ2jdKUtjp5iqV2Cep8j5Olyr1UbJcXhC0EszZuAa8R7ODqJ3POgNZjwXyAW0CXREVgb1Vc0Tpss4QTbmjZoJVO-gh3wn7nt3I4FyPP_acS1SxC-8h0dasMc8CmVRyI/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglktLD1fKbP-ApTBTg7PB7RZlJ5nUterbUuj75YQYDvqH30w_porWGgfzatlu3eruKpvT10SpaPOPeLgFFoYAcGx6FdIcluZ1IKzGaR2jUVId1Vw-3PzzSmj-Y53eiWZYv5831mgGrqUg/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015-2.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHj_1ozGHh1E2vPJqZR8vcT4IV8Mdn79GdENTOBhXr2WqfSgYb7zpj8YLO_nvZO2pr6aVmPx-bO2xFnUDhFaay-YwZJoUQo3IQFLxFVRnmCSuTuAhZPyenKU0sX6ugh2OxtOO5tFCUVBY/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015.-3.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS3W2unih2RqiXutJ_Nj0VvGKO8NEJ2ky5z7QgTQl7_bpdz1Gi5zKfXXiMquywzT4CexLvu0tr1N2AytAEd_JwxZ-lSbmfOY3Eg4El6WwoReIsZkRDu1wn3gmyp5OnOn4hI6kO4b-a7To/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015-4.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEireZIMnbZgFpMay6TL0bFW4h9E0WfwenxCFC-9_ZvvsvWOv3gYgnEc0sVvE3oVuFahPtbkxscCUhiAMGHKxa-ps24ErqSgYM4JXX6qjqi3KWQB2XZ3zQDyzwH5h0lSWsnqN9hZBABoqH0/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015-5.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG0H02oSm1eOP_m-3iF7Te53o7JO61ehSXCq32rvlZgf2ozu9sJzWhYwUknonQXJ2WVq6pvtBF9HEJoVQTp9QMI07sPiLJR_OJRP1g8wM65bQ7aXAqj9U1kAQ357UqdQ8hIMd8ySi9WLw/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015-6.jpeghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaoAsM3c6HDgHV4fwrrjxxO3AEuExTOtHirsAVUr4SJzxvVErkf-Kd2fkp5iS8_g-tNOANSNiFVKdtJxL-BEOe8gcX0umHX3fAnUoeapuCZKRSJZWc-IYqiHz6LX4dP_fPEn2bcKPXtHE/s1600/Jodhpur+High+Court+case+promoton+8-9-2015.-7.jpeg

HISTORIC 37TH CIRCLE CONFERENCE OF AIPEU GR. C, TN CIRCLE CONCLUDED



புதுகை மாநாடு  வெற்றி மாநாடு !

அன்புத் தோழர்களே !  தோழியர்களே ! இனிய  வணக்கம் !

கடந்த செப்டம்பர் திங்கள் 4,5,6 மற்றும் 7 , 2015 தேதிகளில் புதுகை நகரில் நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின்  37 ஆவது தமிழ் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது உங்களுக்குத் தெரியும்.  மாநாட்டிற்கு பல சிறப்புகள் உண்டு . 

முதன் முதலாக குளிரூட்டப்பட்ட அரங்கு,  குளிரூட்டப்பட்ட  இரவு தங்கும் அரங்கு  ஏற்பாடு செய்யப்பட்டது தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற் றில் இதுவே முதல் முறையாகும். 

நீண்ட காலங்களுக்குப் பிறகு (அநேகமாக 1980 க்குப் பிறகு எனலாம் ) தமிழகத்தின்   CHIEF  PMG  கலந்துகொண்டு  கருத்தரங்கில் உரையாற்றியது மட்டுமல்லாமல் , சார்பாளர்களின்  கேள்விகள் அனைத்திற்கும் நம்முடைய தொழிற்சங்க பயிற்சி வகுப்புகளில் நாம் செய்வது போல , அவர் பொறுமையாக பதில் அளித்ததும் இதுவே  முதல் முறையாகும்.  மத்திய மண்டல  PMG அவர்களும் கருத்தரங்கில்  கலந்து கொண்டு உரையாற்றினார். இது  சிறப்பான அரங்காக அமைந்தது.

ஜனநாயக பூர்வமாக, முதல் நாள்  அன்றே CREDENTIAL  படிக்கப்பட்டு "அவை" முறையாக கூட்டப்பட்டதும் இதுவே முதல்முறை எனலாம். எப்போதும்  SUBJECT  COMMITTEE துவக்கி விவாதங்கள் தொடர்ந்த பிறகு இறுதி நாளில்தான்   CREDENTIAL  படிக்கப்படும் . இதனை பல மாநில மாநாடுகளிலும், பல அகில இந்திய மாநாடுகளிலும் நீங்கள் பார்த்திருப் பீர்கள்.

முதன் முறையாக கோட்ட/ கிளை வாரியான சார்பாளர் பட்டியல், உறுப்பினர்  தகுதி,  வாக்கு பதிவிடும் சக்தி (VOTING  POWER) என்பவை பட்டியல் இடப்பட்டு எழுத்து பூர்வமாக அனைத்து  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அதன் நகல் வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.  

மாநாட்டுக்கு வந்திருந்த முன்னாள் மாநிலச் செயலர்  தோழர். பாலு, முன்னாள் துணைப் பொதுச் செயலர்  தோழர். C.A.,  தமிழ் மாநில முன்னாள் அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர். M. கண்ணையன்  உள்ளிட்ட அனைத்து தரப்பின் தலைவர்களையும் அணி வித்தியாசம் பார்க்காமல், மாநாட்டு மேடைக்கு அழைத்து  முறையாக கௌரவப் படுத்தியதும் இந்த  மாநாட்டில்தான்.

முற்றிலும் ஜனநாயக பூர்வமாக செயல்படும் மாநிலச் சங்கம் என்பதற்கு இதுவே  எடுத்துக்காட்டு. மாநாட்டு  நிகழ்வுகள் , பேசப்பட்ட பிரச்சினைகள் எடுத்த முடிவுகள் , மாநாட்டின் இதர சிறப்புகள்  குறித்து விரிவாக புகைப் படங்களுடன் இந்த வலைத்தளத்திலும், சுற்றறிக்கை வாயிலாகவும் விரைவில் வெளியிடப்படும். தற்போது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்  குறித்த விபரங்களை கீழே  வெளியிடு கிறோம். 

மாநிலத் தலைவர்  

    அவர்கள் 
P.A., ROYAPURAM S.O.,   CHENNAI CITY NORTH DIVISION.

இவரை எதிர்த்து போட்டியிட்ட  தோழர். N .சுப்ரமணியன், PM, GR. II, TIRUPUR  COTTON MARKET S.O. ஐ விட 32.01 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

மாநிலச் செயலர் 

அவர்கள் 
P.A. , TIRUVALLIKENI S.O., CHENNAI CITY CENTRAL DIVISION
போட்டியின்றி ஏகமனதாக மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மாநில நிதிச் செயலர் 

 அவர்கள் 
P.A., ANNA ROAD HPO, CHENNAI 600 002
போட்டியின்றி ஏகமனதாக  மாநில நிதிச்செயலராக  தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மாநில உதவித் தலைவர் பதவிக்கு போட்டி இருந்தது. இதில் 
தோழர்கள். 
1. R . பெருமாள்,  P.A., KUMBAKONAM HO
2.J.  ஜானகிராமன், SPM, PM GRADE I , ORDINANCE ESTATE PO, TRICHIRAPPALLI
3. G. ராமமூர்த்தி,  M.E., CHENGALPATTU HPO
ஒரு அணியாகவும் , 

இவர்களை எதிர்த்து  ஒரு நபராக 
தோழர். D. எபினேசர்  காந்தி ,  ACCOUNTANT , COIMBATORE HO அவர்களும்  போட்டியிட்டார்கள் . முதல் மூன்று நிலைகளில்   முறையே 

தோழர். J . ஜானகிராமன்  87.40 வாக்குகளையும் தோழர்.G . ராமமூர்த்தி 85.94 வாக்குகளையும்  தோழர்.R .  பெருமாள் 84.26 வாக்குகளையும்  பெற்று வெற்றி பெற்றனர் .  

தோழர். D. எபினேசர் காந்தி 43.85 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கீழ்க்கண்ட தோழர்கள்  போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மாநில உதவிச் செயலர்கள் 
தோழர்.
R. KUMAR, P.A., PUDUKKOTTAI HPO
S.VEERAN,P.A., CMC HOSPITAL PO, VELLORE
A.RAJENDRAN, P.A.,TIRUPUR  NORTH PO
V. JOTHIKUMAR, P.A., NAGAL NAGAR S.O.,DINDIGUL 
C. MOHAN, P.A.,MADHAVARAM MILK COLONY , AMBATTUR

மாநில உதவி நிதிச் செயலர் 
தோழர். N. GOPAL,  P.A.,BIG KANCHIPURAM

மாநில அமைப்புச் செயலர்கள் 
தோழர்,
C. SASIKUMAR,   S.A.,SRIRANGAM  H.O.
S. PONNUSAMY, P.A,, ETTAYAPURAM S.O., KOVILPATTI 
A.EZHILVANAN, SPM, JAMBAI, BHAVANI

SUPREME COUNCILLORS:

தோழர்கள் 
N. RAJENDRAN, CHENNAI CITY SOUTH DN
N .SUNDARAVADIVEL,  ARNI
V.PALANIMUTHU, DHARMAPURI
P.NATARAJAN, ARAKKONAM
K. MURALI , CHENNAI GPO
P. MOHANASUNDARAM, GOPI
P. SEKAR, PATTUKKOTTAI
M. VASU, PONDICHERY
K. S. SOUNDARAPANDIAN, CHENNAI CITY NORTH
A.M. SEKAR, NILGIRIS
K. SUBRAMANIAN, TIRUCHENGODU
N. ARIVAZHAGAN, RAMNAD
S. RAJKUMAR, PALANI
A. PALANISAMY, KARUR
V. MAGESH , CHENNAI CITY CENTRAL 

STATE MAHILA COMMITTEE:-

PRESIDENT: COM. ANGEL SATHIYANATHAN, CHENNAI CITY NORTH DN
CONVENER: COM. R . MANIMEGALAI, ANNA ROAD HPO

மாநாட்டு வெற்றிக்கு உழைத்த ,  நன்கொடை அளித்த, ஒத்துழைப்பு அளித்த , இரவு பகலாக மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்த  அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் , தலைவர்களுக்கும், 

மாநாட்டு ஏற்பாடுகளை, கடந்த ஒரு மாத காலமாக பசி நோக்காது கண் துஞ்சாது  சிறப்பாக செய்து கொடுத்த  புதுகை கோட்டத்தின் வரவேற்புக் குழுவுக்கும் , குறிப்பாக தோழர்கள்  R . குமார், K.R. கண்ணன் , வைத்தீஸ்வரன், பார்த்திபன் , நாகராஜன் , ஜானகிராமன் உள்ளிட்ட இதர தோழர்களுக்கும், மகிளா   கமிட்டி தலைவர் தோழியர். நாகஜெயம் அவர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

மாநாட்டில் கலந்துகொண்டு வழி காட்டிய மூத்த தலைவர்கள்  தோழர் . KVS , தோழர் K .R .,  நம்முடைய சம்மேளன மற்றும் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். பராசர்  , முன்னாள் அகில இந்திய தலைவர் தோழர். சிவநாராயணா, சம்மேளன செயல் தலைவர் தோழர். A . மனோகரன்,சம்மேளன உதவி மா பொதுச் செயலர் தோழர். S . ரகுபதி, அகில இந்திய முன்னாள் செயல் தலைவர் தோழர். N .G .,  மற்றும் 

கலந்துகொண்டு சிறப்பித்த அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G கண்ணன் , R 3 மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ், R 4  மாநிலச் செயலர் தோழர். B . பரந்தாமன், AIPEU GDS NFPE மாநிலச் செயலர் மற்றும் துணைப் பொதுச் செயலர் தோழர். R . தனராஜ் , மாநிலத் தலைவர், தோழர். S . ராமராஜ், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் தோழர். K.C. ராமச்சந்திரன், அஞ்சல் நான்கின் மாநில உதவிச் செயலர் தோழர். G . சுரேஷ்பாபு, CASUAL  ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர். D. சிவகுருநாதன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநாட்டு கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்த நம்முடைய  CHIEF PMG  திரு. DR . CHARLES  LOBO , IPoS  அவர்களுக்கும்,மத்திய மண்டல PMG  திரு.  J.T. VENKATESWARLU, IPoS  அவர்களுக்கும், புதுகை  கோட்ட  கண்காணிப்பாளர்  திரு. K. EZHIL  அவர்களுக்கும்  இதர அதிகாரிகளுக்கும்  நம்முடைய நெஞ்சார்ந்த நன்றி !

கடந்த ஈராண்டுகளில் இந்த மாநிலச் சங்கத்தின் செயல்பாடுகளில் பெரும் பங்காற்றி தற்போது  பணியில் இருந்து விடுபடும்  நம்முடைய அஞ்சல் மூன்றின்  முன்னாள் மாநிலத் தலைவர்  தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ், மாநில முன்னாள் உதவித் தலைவர்கள்  தோழர். V. வெங்கட்ராமன்,  D.எபினேசர் காந்தி, முன்னாள் மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி, முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர் R .V . தியாகராஜபாண்டியன் , முன்னாள் மாநில உதவிச் செயலர் தோழர். S.K. ஜேக்கப் ராஜ் ஆகியோருக்கும்  நம்முடைய மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

மாநாட்டு நிகழ்வில் சில புகைப்படங்களை கீழே வெளியிடுகிறோம். விரிவான அறிக்கை மற்றும் முழுவதுமான புகைப்படங்கள் விரைவில் வெளியாகும்.









Thursday 3 September 2015

CENTRAL GOVERNMENT EMPLOYEES MAY GET MORE BONUS THIS YEAR

 After long times Central Govt. employees are going to get higher amount of bonus this year. Earlier, the ceiling for bonus was Rs 3500 per month. From this year, the ceiling is going to be increased to as high as Rs 10,000 per month. In a letter from Secretary, Ministry of Labour and Employment, Mr S. Agarwal conveyed this good news to Sri Vijesh Upadhyay, Genl. Secy., Bharatiya Mazdoor Sangha.